சனி, 18 ஜூலை, 2009

தோழர் சிற்றரசு படுகொலை





கோவைஅருகே உள்ள ஊஞ்சம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர் இயக்க தோழர் சிற்றரசு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த கோமதி என்ற கவுண்டர் சாதிப்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சூலை 6 2008 அன்று வெளியூர் சென்று திரும்பிய சிற்றரசுவை கவுண்டர் சாதிவெறியர்கள் தலையை நசுக்கிக் கொன்றனர். இதனை போலீசார் விபத்தாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் சிற்றரசுவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதைக் கூடச் சகிக்க முடியாத கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, ""தாழ்த்தப்பட்ட மக்களின் ஊர்வலத்தால் வன்முறை பெருகிவிட்டதென்றும், இத்தகைய ஊர்வலங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும்''சோமனூர் , சாமளாபுரம் பகுதிகளில் ஒருநாள் கடை யடைப்பை நடத்தியது.